இஸ்ரேல் நாட்டில் வேலை வாய்ப்பு 10000 காலியிடங்கள் உடனே விண்ணப்பியுங்கள்

israel 10000 job vacancy

இஸ்ரேல் நாட்டில் 10,000 பேர் பணிபுரிய வாய்ப்பு உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.நா. மகேஸ்வரன்  வெளியிட்டுள்ள அறிக்கையில்: இஸ்ரேல் நாட்டில் 10,000 கட்டுமான பணியாளர்களுக்கான வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கு 3 வருடம் பணி அனுபவம் உள்ள 25 முதல் 45 வயதிற்குட்பட்ட பூச்சு வேலை,செராமிக் டைலிங், கட்டிடம் மற்றும் இரும்பு சம்பந்தப்பட்ட வேலை ஆகிய பணிகளுக்கு ஆண் பணி யாளர்கள் தேவைப்படுகிறார்கள். மாத ஊதியமாக சுமார் ₹1,37,000 பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் www.omcmanpower.in.gov. in என்ற வலைதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். israel 10000 job vacancy மேலும் ovemcinm@gmail.com sesirm மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ் போர்ட் நகலினை வரும் 29ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


கூடுதல் விபரங்களை அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறு வன வலைதளம் www. omcmanpower.in.gov.in. தொலைபேசி எண்கள் (044-22505886/22502267)மற்றும் வாட்ஸ் அப் எண் (9566239685) क அறிந்துகொள்ளலாம். அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்ப தால் இதன் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்டுகளோ இல்லை. ஆகவே விருப்பம் உள்ள வர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

விண்ணப்பிக்க:- CLICK HERE

https://omcmanpower.tn.gov.in/jobInfo.php?jid=354&lang=tm