நடிகர் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம் dd next level review in tamil
நடிகர்கள்:- சந்தானம், செல்வராகவன், கெளதம் மேனன், கீத்திகா, யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, நிழல்கள் ரவி, மாறன், மொட்டை ராஜேந்தர், பிரசாந்த் ரங்கசாமி, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
இயக்கம்:- பிரேம் ஆனந்த்
கதை:-
கிருஷ்ணா என்கிற சந்தானம் யூடியூபில் சினிமா விமர்சனம் சொல்வதற்காக கிஸ்ஸா என மாற்றிக் கொண்டு படங்களை விமர்சனம் செய்து வருகின்றார் திரை விமர்சகர்களை குறிவைத்து தன்னுடைய பாழடைந்த தியேட்டருக்கு வரவழைத்து கொல்லும் பேய் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) இவர் சினிமா இயக்குனராக இருந்து ஒரு சிலரால் கொல்லப்படுகிறார்.
அவரோ ஒரு தியேட்டரில் பேய் ஆக இருக்க, சினிமாவைப் பற்றி தவறாக விமர்சனம் செய்பவர்களை ஸ்பெஷல் ஷோ என்று அழைத்து கொல்கிறார். இவர் ஹீரோ கிஸாவை தனது திரையரங்குக்கு வரவழைக்கிறார். தனது அப்பா நிழல்கள் ரவி, அம்மா கஸ்தூரி, தங்கை யாஷிகா ஆனந்த் அவரது நண்பரும் (மொட்டை ராஜேந்திரன்) ஆகியோருடன் தியேட்டருக்கு செல்கிறார் சந்தானம்.
அங்கு சென்ற பிறகு திரையில் ஓடுகின்ற படத்திற்குள் இவர்கள் அனைவரும் ட்ராவல் ஆகின்றனர். திரைக்குள் ஹீரோவின் காதலி (கீதிகா திவாரி) பேயாக மாறி இருக்கிறார். அவர் ஏன் பேயாக மாறினார்? தன்னையும் தனது குடும்பத்தினரையும் கிஸ்ஸா காப்பாற்றினாரா? இல்லையா? திரைக்குள் இருந்து தனது குடும்பத்தை ஹீரோ எப்படி வெளியே கொண்டு வந்தார் என்பதே ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் மீதிக் கதை.
டிரைலர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=OmMsc2l6pM4