நடிகர் சூரியின் மாமன் திரைப்பட விமர்சனம் Maaman Review tamil

நடிகர்கள்:-

சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


கதை:-

நாயகன் சூரி, தனது அக்கா சுவாஷிகா மீது அன்பாக இருக்கிறார். திருமணமாகி 10 வருடங்களாக குழந்தை இல்லாமல் ஏச்சு பேச்சு வாங்கி வாழும் கிரிஜாவிற்கு (சுவாசிகா) பல ஆண்டுகள் கழித்து ஆண் குழந்தை பிறக்கிறது. அவனை தன் மகன் போல பாலும் தேனும் ஊட்டி உருகி உருகி வளர்க்கிறார் தாய் மாமன் இன்பா (சூரி).தனது அக்கா மீது காட்டும் அன்பவை விட அக்கா மகன் மீது அதிகம் அன்பு காட்டுகிறார்.

அக்கா மகனும் பெற்றோரை விட சூரியுடன் தான் அன்பாக இருக்கிறார். சூரியுடனேயே அந்த சிறுவன் வளர்கிறான். நாயகி ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சூரியின் இல்லற வாழ்வில், அக்கா மகனால் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது. அக்கா மகனை பிரிய முடியாமல் சூரி மனம் வெதும்புகிறார். ஒரு கட்டத்தில் சூரி குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. சூரி தனது பாசத்தை விட்டுக் கொடுத்தாரா? விலகி சென்ற உறவுகளை மீண்டும் சேர்த்தாரா? என்பதே மீதி கதை.

டிரைலர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=RFxRhOVGp4U