சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் எப்படி இருக்கு முழு விமர்சனம் இதோ

1960 காலகட்டத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


1959-ம் ஆண்டு ரயில்வே பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு முழுக்க முழுக்க இந்தி மொழியிலேயே நாடு முழுவதும் வெளியிடப்படுகிறது. மாணவர் புரட்சி படை நடத்தி வரும் (செழியன்) சிவகார்த்திகேயன் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக  (சிவகார்த்திகேயன்) தலைமையில் இந்தி பேசாத பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை உள்ளடக்கிய புறநானூற்றுப் படை களமிறங்கி, ரயிலைக் கொளுத்துகிறது.இந்த ரயிலெரிப்புப் போராட்டத்தில் நடந்த சண்டையில் தன் விரலை இழந்து, அரசாங்கத்திடம் கெட்ட பெயரையும் சம்பாதிக்கிறார் மத்திய அதிகாரியான திரு (ரவி மோகன்).அதன்பின் சிவகார்த்திகேயன் தனது உயிர் நண்பனை போராட்டத்தின் போது கொல்லப்பட, சிவகார்த்திகேயன் போராட்டத்தை கைவிடுகிறார். தன் தம்பி சின்னதுரை (அதர்வா) மற்றும் பாட்டியுடன் (குலப்புள்ளி லீலா) அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார் செழியன்..

இந்த சூழலில் தனது உயிர் நண்பனை போராட்டத்தின் போது பறிகொடுக்கும் சிவகார்த்திகேயன், அன்று முதல் போராட்டத்தை கைவிடுகிறார். தன்னால் யாரும் பாதிப்பு அடைந்து விடக்கூடாது என்று போராட்ட உணர்வை தன் மனதிலேயே குழி தோண்டி புதைக்கிறார். அதே வேலை சிவகார்த்திகேயனை பழிவாங்க ரவி மோகன் துடித்துக் கொண்டிருக்கிறார்.

சில ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தற்போது சிவகார்த்திகேயன் மத்திய அரசு பணியில் உள்ளார். அவரது சகோதரர் சின்னா (அதர்வா) தற்போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் சகோதரர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படுகிறது.போராட்ட களத்தில் இருந்து தம்பியை பின்வாங்க செய்யும் முயற்சிகளில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஈடுபடுகிறார்.

இப்படியான சூழலில் மதுரையில் நடக்கும் ஒரு விழாவில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் சூழலில், கருப்புக் கொடி காட்டுவது என்ற முயற்சியை அதர்வா தலைமையிலான குழுவினர் திட்டமிடுகிறார்கள். அதே வேளையில் இந்தி தெரியாத காரணத்தால் மத்திய அரசின் வேலை பரிபோக அதிர்ச்சியில் சிவகார்த்திகேயனும் அங்கு வந்து சேர்கிறார். போராட்டத்தை தடுத்து நிறுத்த ரவி மோகனும் அங்கு விரைகிறார்.அதன் பிறகு என்ன ஆனது?

போராட்டம் திட்டமிட்டபடி நடந்ததா?

இறுதியில் சிவகார்த்திகேயன் ரவிமோகனின் மோதலின் முடிவு என்ன?

இந்தி போராட்டத்தின் விளைவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.