விஷால் திருமணம் செய்யும் நடிகை யார் தெரியுமா sai dhanshika vishal marriage

விஷால் திருமணம் செய்யும் நடிகை யார் தெரியுமா sai dhanshika vishal marriage

நடிகர் விஷாலுக்கு திருமணம் ஆகப்போவதாகவும் மணப்பெண் குறித்தான செய்திகளும் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவுகின்றன.விஷால் கிருஷ்ணா ரெட்டி, பிரபலமாக விஷால் என்று அறியப்படுகிறார், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.


நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே நான் திருமணம் செய்துகொள்வேன் என்று அறிவித்தார். தற்போது நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் நடிகர் சங்க கட்டிடம்தான் என் கனவு. அதனால்தான் கட்டிடம் கட்டப்பட்ட பின்னரே எனக்கு திருமணம் என்று அறிவித்தேன்.

வெறும் வாய் வார்த்தைக்காக மட்டும் இதை சொல்லவில்லை. ஒரு சவாலாக எடுத்துக்கொண்டேன். நான் வெறும் 3 ஆண்டுகளில் முடிந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால் 9 ஆண்டுகள் தாண்டிவிட்டது. நடிகர் சங்க கட்டிடம் முழுமையடையும் நிலையில் இருக்கிறது. ஆகஸ்ட் 15-ந்தேதி நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க திட்டம் வகுத்துள்ளோம். அநேகமாக ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் எனக்கு திருமணம் உறுதி. என் பிறந்தநாளான ஆகஸ்ட் 29-ந்தேதி கூட எனக்கு திருமணம் நடைபெறலாம். எப்படி பார்த்தாலும் இன்னும் 4 மாதத்தில் எனக்கு திருமணம் நடக்கும்.பெண் பார்த்து விட்டோம். பேசி முடித்துவிட்டோம். காதல் திருமணம்தான். அவர் யார்? அவர் பெயர் என்ன? என்பதை நேரம் வரும்போது சொல்கிறேன்.ஒரு மாதமாகத்தான் அந்த பெண்ணை காதலித்து வருகிறேன். விரைவில் நல்ல தகவல் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை மணக்கவுள்ளாராம். இருவருக்கும் இடையே சில மாதங்களாக நட்பு இருந்து வந்ததாகவும், அது தற்போது காதலாக மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் யோகி டா' திரைப்பட இசை வெளியிட்டு விழாவில்  நடிகர் விஷாலும் தன்ஷிகாவும் பங்கேற்றனர் அப்போது நடிகை தன்ஷிகா நாங்கள் இருவரும் காதலிப்பதாகவும் நானும் விஷாலும் ஆகஸ்ட் 29ம் தேதி திருமணம் செய்துகொள்ளப் போகிறோம் என அறிவித்தார்

நடிகை தன்சிகா பேராண்மை திரைப்படத்தில் நடித்து தமிழ்த் திரைப்பட உலகில் பிரபலமானார்.இவர் தஞ்சையில் பிறந்தவராவார், இவரது தாய் மொழி தமிழ் ஆகும்.பின்பு அரவான், பரதேசி போன்ற தமிழ் படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு ரஜினிகாந்த்துடன் கபாலி படத்தில் நடத்துள்ளார்